
காரட்டின் பயன்கள்
நமது அன்றாட உணவில் தினம் ஒரு பழச்சாறு அருந்துவது மிக முக்கியமானது.உடலை பிணியிடம் இருந்து காப்பதை நமக்கு சில அரிய வகை உணவு பழக்கவழக்கம் அவசியமாகிறது.
காரட் நமது இந்தியாவில் பல்வேறு பகுதியில் விளைகிறது.குறிப்பாக ஹரியானா, ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள்.காரட் வைட்டமின்”A” சத்து அதிகமுல்ல ஒன்றாகும்.அப்படி ஒரு காரட்டை பற்றி அதன் பயன்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்
காரட் கண்ணுக்கு மிக முக்கிய தோழனாக இருக்கிறது. அது கண்பார்வையை பலப்படுத்துகிறது.எழுத்தாளர்கள்,கணினியை அதிகமக பார்த்து கொண்டேவேலை செய்பவர்கள் தினம் ஒரு காரட் சாறு அருந்துவது நல்லது.
மலச்சிக்கல் அதிகமாக இருப்பவர்கள் இதை அருந்தலாம்.காரட் வயிற்றை சுத்தமாக வைத்து கொள்வதால் குடல் புண் வராது.
இதய துடிப்பை சீராக வைத்துகொள்ள காரட் உதவுகிறது. ரத்தம் கெட்டியாகி உறைந்துவிடாமல் இதய மாரடைப்பை வராமல் பாதுகாக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக சக்தி அதிகரிக்கவும், புத்தி கூர்மை உண்டாகவும், ஏழு எட்டு பாதாம் பருப்புகளுடன் காரட் சாறு அருந்தி வந்தால் போதும், மூளை விழிப்புடன் இருக்கும்.
மஞ்சள்காமாலை நோயாளிகள் விரைந்து குணமாக தினமும் அருந்தும் காரட் சாறு உதவுகிறது.
வயிற்றில் உள்ள பூச்சிகளை மருந்தின்றி அப்புறப்படுத்தவும், வறண்ட தோல் பளபளப்பாக மாறவும், பருக்கள் மருந்தின்றி மறைந்து முகம் சிவப்பாக மாறவும், நெஞ்சு வலி, முதுகு வலி குணமாகவும், மாதவிலக்குக் காலம் சரியான இடைவெளியின்படி ஏற்படவும் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தி வரவேண்டும்.
தாய்ப்பால் தரமாக இருக்கவும், தொடர்ந்து கிடைக்கவும் காரட் சாறு அருந்த வேண்டும். குறைவான செலவில் கிடைக்கும் சத்துணவு இது.
குழந்தை இல்லாத தம்பதிகள் தினமும் அருந்தும் காரட் ஜுஸில் உள்ள வைட்டமின் ‘ஈ’யால் குழந்தை பாக்கியம் அடைய வாய்ப்பு உண்டு.
உருளைக் கிழங்கில் உள்ளதை விட 6 மடங்கு அதிகமான சுண்ணாம்புச் சத்து காரட்டில் இருக்கிறது. இந்தக் கால்சியம் எளிதில் ஜீரணிக்கப்படுவதால், எலும்புகள் உறுதி பெறுகின்றன. பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம்.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் போல் இருந்து உதவுகிறது. எனவே, இவர்களும் காரட்டின் சாறு அருந்தலாம்.
இவ்வளவு நன்மைகள் கொண்ட காரட் ஜுஸை தினமும் ஒரு கிளாஸ் அருந்தினாலே போதும். அதிகத்தடவை அருந்தினால் மூலத்தொந்தரவுகள் வரவும் வாய்ப்புண்டு. புதிய காரட்டுகளை உடனுக்குடன் மிக்ஸியில் அரைத்துத் தயாரித்து அருந்துவதே நல்லது.